i wish to congratulate Jeyamohan and wish him the best on the 10 year journey, starting Jan1 2014 he has undertaken to write a 10 series novel based on the Mahabaratha. The epic journey that it is, i am overawed. for those who could not follow it on his site, i wish to give a brief summarised version here...
ஆதியில் இருள் மட்டும் இருந்தது. அந்த இருளில் தோன்றிய ஒரு இச்சையின் காரணமாக இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் தோன்றின. முடிவில்லாத காமத்தின் உருவகம் தட்ச்ச பிரஜாபதி. இப்படி தட்ச்சனின் வழி தோன்றியவை தான் நாமும் நம்மை சுற்றியுள்ள அனைத்தும். அப்படி தோன்றிய நாகர் குலம் வழி வந்த மானசா தேவி வேசர தேசத்தில் இருக்கிறாள். அவளுக்கும் ஜரத்காரு முனிவருக்கும் தோன்றிய மகன் ஆஸ்திகன்.
ஆறு வயதான ஆஸ்திகனை குளிக்கச் செய்து மர உரி தரிக்கச் செய்து வழி அனுப்பி வைத்தாள் மானசா தேவி. 270 நாட்கள் நடந்து ஆஸ்திகன் அஸ்தினாபுரம் போய் சேருகிறான். நகரம் கலை இழந்து வெறுமையாக தோன்றுகிறது. நகரமே யாகம் ஒன்று நடக்கும் இடத்தில் கூடி இருக்கிறது. ஆஸ்திகனுக்கு பிரமச்சாரி என்ற அளவிலே அவனுக்கு ஒரு குடில் ஒதுக்கப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது.
குரு வம்சத்தின் 52வது வாரிசான மன்னன் ஜனமேஜயன் ஐந்து மாதங்களாக நடத்தி வந்த பூதயாகத்தின் இறுதி நாள் அன்று. தனது வம்சத்தை பீடித்திருந்த நாக தோஷத்தை போக்கும் வண்ணம் அவன் இந்த வேள்வியை நடத்துகிறான்.
ஜனமேஜயன் அபிமன்யுவின் பேரன். அபிமன்யு போர்க்களத்தில் இறக்கும் போது அவனது மனைவி உத்தரைக்கு 16 வயது. அவள் கருவுற்றிருந்தாள். சோகம் உயிர் அழுத்திய அவள் 6 மாதங்களிலேயே குழந்தைப போல் ஒன்றை ஈன்றிறந்தால். குரு வம்சத்தின் எஞ்சி இருந்த ஒரே வாரிசின் நிலை யுதிஷ்டிரனை கதி கலங்கச் செய்தது. த்ரௌபதி கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டாள்.
கிருஷ்ணன் அந்த குழந்தையை அன்னையிடமிருந்து பிரித்து ஒரு கடல் சிப்பியில் நான்கு மாதங்கள் வைத்து உயிர்ப்பிக்கச் செய்தான். அவ்வாறு த்வரகையில் பிறந்தவன் தான் ஜனமேஜயனின் தந்தை பரிக்ஷீத்.
பரிக்ஷீத் வேட்டையில் ஈடுபாடு உள்ளவனாக வளர்கிறான். ஒருமுறை வேட்டையின் போது ஒரு நாக சாபத்திற்கு உள்ளாகிறான். யுதிச்ற்றன் தன சகோதரர்களுடன் மகாவன்ப்ரச்தம் புக ஆட்சி பரிக்ஷீதிர்க்கு சேர்கிறது. தனது சாவு நாகத்தினால் என்று அறிந்து கொள்ளும் அவன் தன வம்சகுருவிடம் ஆலோசனை கேட்கிறான்.
இந்த உலகத்தில் காமம், குரோதம், முதலிய தீய குணங்களே நாகங்களாக உருவகம் கொள்கின்றன ஆகையால் நீ அவற்றை வென்று விட்டால் நீ தப்பிக்கலாம் என்று அறிவுறுத்துகிறார். வேறு வழி இல்லாமல் பரிக்ஷீத் அனைத்தையும் துறந்து ஒரு நீரரன் அமைத்து அதன் நடுவில் தவம் மேற்கொள்கிறான். அவனைத் தீண்ட ஒரு நாகம் சமயத்திற்காக காத்து நிற்கிறது. ஆறு நாட்கள் கழிகின்றன. ஏழாம் நாள் முடியும் முன் தான் காமத்தையும் அகங்காரத்தையும் முற்றிலும் வென்று விதியை தன மதியால் வென்று விட்டதாக எண்ணுகிறான். அந்த அகங்காரமே, அவன் உண்ட பழம் ஒன்றில் நாகம் சிறு புழுவாக தோன்றச்செய்து, தீண்டப்பட்டு இறக்கிறான்.
தந்தையை உண்ட அந்த நாக தோஷத்தில் இருந்து தன வம்சத்தை தப்புவிக்கவே ஜனமேஜயன் இந்த யாகத்தை நடத்துகிறான். வேள்வி செய்தவர்கள் அந்த வேள்வித் தீக்கு எல்லா சிறந்ததையும் தந்தனர். ஒரு கட்டத்தில் அனைத்து நாகங்களும் அந்த வேள்வியின் பயனாக அழிந்து விடுகின்றன. இந்த பூமியே ஒளி கூடியதாகிறது.
ஆனால் தட்சன், தட்சகி என்ற பெரிய நாகங்கள் இன்னும் அழியவில்லை. அவர்கள் இந்திரனிடம் சரண் புகுந்திருப்பதை அறிந்து பெரும் சிரத்தை எடுத்து இந்திரனை வர்வித்து, அவர்களையும் வரவைக்கிறார்கள்.
தட்சகன் மாய்க்கப்படும் நேரம், ஆஸ்திகன் வேள்வியில் இருந்து எழுந்து தனக்கு இன்னும் வேள்விக்காநிக்கை தரப்படவில்லை என்று குறை கூறுகிறான். தனக்கு காணிக்கையாக தட்சனின் உயிரை கேட்கிறான்.
காரியம் கைகூடி வருகையில் இப்படி ஒரு தடை ஏற்ப்பட்டது கண்டு ஜனமேஜயன் பெரும் சினம் கொள்கிறான். வேறு வழி இன்றி காணிக்கை தருகிறான் ஆனால் ஆஸ்திகன் வெளியேறக் கூடாதென்று வழி மரிக்கிறான்.
சத் ரஜஸ் தமஸ் குணங்களின் சமநிலையிலேயே பூமி சரியாக இயங்க முடியும். இந்த சமநிலை பாதிக்கப்பட்டால் பூமி மட்கி அழியும் என்பதை எடுத்துக் கூறுகிறான். வேண்டுமானால் வியாச முனிவரை அழைத்து கேட்கும்மாறு கூறுகிறான்.
வியாசர் யமுனை நதிக்கரையில் பிறந்தவர். குருக்ஷேற்ற போர்பூமியில் இருந்தவர்களை உயிர்ப்பிக்கவேண்டும் என்ற பிரயத்தனத்தில் ஒரு காவியம் பாட எண்ணி தவம் மேற்கொள்கிறார். அவர் தவம் செய்யும் இடத்தில் ஒரு யானை வந்து தன தந்தத்தின் ஒரு பகுதியை விட்டு செல்கிறது.
அதையே வைத்து, அந்த யானையே கணபதியாக நினைத்து தன காவியத்தை எழுதி முடிக்கிறார் வியாசர். வேள்வி மேடைக்கு வரும் வியாசர், சிறுவன் ஆஸ்திகனை ஆசிர்வாதிக்கிறார். அவன் கூறுவது உண்மை என்றும் அதை அறிந்திட தனக்கு 200 வருடங்கள் தேவைப்பட்டது என்றும் கூறுகிறார்.
புரியாமல் நிற்கும் ஜன்மேஜயனுக்கு தனது காவியத்தை பாடி புரியவைக்குமாறு வைசம்பாயனரிடம் ஆணையிடுகிறார். ஆசிரியனின் அகங்காரத்தில் இருந்து தொடங்குமாறு கூறுகிறார்..

No comments:
Post a Comment