Tuesday, January 14, 2014

books books....

at 37th Chennai Book Fair - 2014:
got to spend some couple of hurried hours with my beloved books... picked up the following:
அள்ளியவை
1.எவரெஸ்ட் - எனது உச்சி யாத்திரை - பசேன்றி பால் , NBT , this and nos 17, 19 were small booklets
2. தேவதாசியும் மகானும் - Sriram Venkatakrishnansriram
3. அந்தக் காலத்தில் காபி இல்லை - A.r. Venkatachalapathytchalapathy
4. விருட்சம் இதழ்கள்
5. தமிழிசை வரலாறு - நா மம்மது
6. தற்காலச் சிறந்த கவிதைகள் -விக்ரமாதித்யன் தொகுப்பு
7. திரிவேணி - தூரன் குணா, பாதரசம் - Saro Lama
for my interest in sculptures and monuments:
8. நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் - பாலுசாமி
8.எ. புளிக்குகையும் கிருஷ்ணா மண்டபமும் - பாலுசாமி
for fascination with chellappa:
9. தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது- சி சு செல்லப்பா
10. பிரமாண்டமும் ஒச்சமும் - தொகுப்பு
for a couple of most gentle writers:
11. எனக்குப் பிடித்த கதைகள் - பாவண்ணன்
12. எரியாத நினைவுகள் - அசோகமித்திரன்

13. இசங்கள் ஆயிரம் - சுரேஷ் m .g
14. அயோத்திதாசரும் சிங்காரவேலரும் - வெளிவராத விவாதங்கள்
for the love of soil:
15. பூமித்தாயே - நம்மாழ்வார்
16. நிலவளம் - க நா சு (மொ பெ )
17.இந்தய சுயராஜ்யம் - காந்தி
18. உலகக் கல்வியாளர்கள் - நடராசன்
19. how birds fly- satish daawan- NBT
20. மரபசு - தி ஜா
some rare picks:
21. Dr சுதர்ஷன் lectures 1970-71- for rs.3 from unvi of madras press,
2 books on srilankan tamil issue in late 80s from univ press, a book on jainism and
a book on தெ பொ மீ

at The Hindu Lit for Life (LFL)-2014: Jan 11-13

I love listening to good conversations and i had a feast at The Hindu LFL- 2014. :

@ The Hindu Lit for Life :
Day 1, 11/1/14
1. Listening to Aravind adiga recounting days in Chennai... was glad that he mentioned A.r. Venkatachalapathy's 'Chennai not madras', and meeting Ashokamithran in the passing
2. Arumugam Kr, and Rohini reading from Tamil works 'Saayavanam', "thiruvaai mozhi' Perumal Murugan's koolamaathaari was a refreshing breeze on an English stage...
3. Anita R Ratnam's rendering of the poetic lines in movement and Revathy Kumar's voice was magical..
4. madhuri banerjee looked beautiful, Mamang dai had the depth and clarity of a meditative silence
5. enjoyed the camaraderie btwn Gulzaar and Pavan.k.varma..
6. Naresh Fernandes seemd to have all the best lines.. to an audience' qsn on wat clicked best for a books sales e quipped he pitched in 'write the damn thing'
7. Fell for Paul Zacharia's eloquent oration and his take on religion and institutions...
8. @a.r. venkatachalapthy's take on mythologies had thebearings of his fascination and study of Pudumaipiththan and Periyaar
9. Jim grace' ease on stage was fascinating
10. was eagerly looking fwd to Naomi wolf on stage, given the oomph that she brings in, but in conversation with Barkha Duttshe came across as a very genuinely concerned humanist
11. a differnce in the schedule in a pamphelet given at the venu and the actual made me wait in vain for william darlymple. The organisers did not bother to clarify or apologise...:(


@ The Hindu Lit for Life, Day 2:
after an absrobing day 1 at LFL, persuaded Sumi Vijay to join me...
1. Hurried to the venue to be in time for a rendezvous with T.M.krishnan in convsn with Gopal Gandhi, i was looking fwd so much to this ssn that i had got hold of 'the southern music' and tried to finish a few chapters in preprn... He dazzled me by singing a couple of songs xplaining the words and the musicality... felt blessed to have been there to witness this artist talk abt his art...
2. next was, wat wld qlfy to be called Magnum opus.., Romila Thapar talking abt Historicality in in North indian traditions.. she refuted the widely held view in the west that Early India lacked a sense of History.. She expounded upon the history in Vedic, puranic and shramnic traditions...while touching upon suthras songs and history she reminded me of portions in venmurasu
3. Next a Talk abt Megacities: chennai- Nirmala lakshman, Mumbai- abraham vergeese, Calcutta- amit chaudhri, @pushpa arabindoo's moderation left me wishing for more... i thot she restricted the discussion to some 'headline' items on Megacities...
4. Nxt a workshop with Anita R Ratnam on movements. it was refresshing experience breaking 'muscle memory'
5. Hurried back in time to catch with another 'Magnum opus' - William Darlymple talking abt The battle of afganistan. He sounde like a master orchestrator conducting the symphony of History
6. took a short brk for some pongal shopping, jus enuf a brk to catch up anwar's 'yaadhum'
7. Came back early and was blessed to listen to the music of Vidya shah, she gracefully interlaced the music with interesting anecdotes.. got to hear the sarangi play for the fst time.. felt blessed..
8. 'yaadhum' captures a unique facet of tamil culture, the syncretic features in Tamil islam, i think everyone shld watch this movie, for all of us need to cultivate inquisitiveness abt our culture and history.. Have to get hold of Anwar's docu on the big temple


@ The Hindu Lit for Life, Day 3:
1. The final day, hurried to the venue to participate in a workshop with A.r. Venkatachalapathy about 'biographies'.. was floored to see Gopal Krishna Gandhi and T.M. Krishna and Sriram Venkatakrishnan among the participants.. the lack of good biographical writing in south asia, the essential aspects of a good biography, instances of some good ones were among those discussed.. i was jus happy to be sitting in the front row and listening to A. R. Venkatachalapathy
2. hurried bk from the work shop to listen to Naomi Wolf talk abt 'beyond the vagina'.. i went in looking for some sleaze, but i got simple staright talk abt female-body's bio-wiring for sexuality, she carried herself in a very dignified manner at the same time never shying from talking abt the 'g-spot' or in a matter of fact tone , clitoris. a gorgeously beautifula and a very sensible feminist.
Thats all i had time for as i had to do spend time with books, b4 my family called it an end to my wanderings and ordered me bk home.
 

Sunday, January 5, 2014

Venmurasu -week 1-வேள்விமுகம்

 i wish to congratulate Jeyamohan and wish him the best on the 10 year journey, starting Jan1 2014 he has undertaken to write a 10 series novel based on the Mahabaratha. The epic journey that it is, i am overawed. for those who could not follow it on his site, i wish to give a brief summarised version here...

ஆதியில் இருள் மட்டும் இருந்தது. அந்த இருளில் தோன்றிய ஒரு இச்சையின் காரணமாக இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் தோன்றின. முடிவில்லாத காமத்தின் உருவகம் தட்ச்ச பிரஜாபதி. இப்படி தட்ச்சனின் வழி தோன்றியவை தான் நாமும் நம்மை சுற்றியுள்ள அனைத்தும். அப்படி தோன்றிய நாகர் குலம் வழி வந்த மானசா தேவி வேசர தேசத்தில் இருக்கிறாள். அவளுக்கும் ஜரத்காரு முனிவருக்கும் தோன்றிய மகன் ஆஸ்திகன்.

ஆறு வயதான ஆஸ்திகனை குளிக்கச் செய்து மர உரி தரிக்கச் செய்து வழி அனுப்பி வைத்தாள் மானசா தேவி. 270 நாட்கள் நடந்து ஆஸ்திகன் அஸ்தினாபுரம் போய் சேருகிறான். நகரம் கலை இழந்து வெறுமையாக தோன்றுகிறது. நகரமே யாகம் ஒன்று நடக்கும் இடத்தில் கூடி இருக்கிறது. ஆஸ்திகனுக்கு பிரமச்சாரி என்ற அளவிலே அவனுக்கு ஒரு குடில் ஒதுக்கப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது.

குரு வம்சத்தின் 52வது வாரிசான மன்னன் ஜனமேஜயன் ஐந்து மாதங்களாக நடத்தி வந்த பூதயாகத்தின் இறுதி நாள் அன்று. தனது வம்சத்தை பீடித்திருந்த நாக தோஷத்தை போக்கும் வண்ணம் அவன் இந்த வேள்வியை நடத்துகிறான்.

ஜனமேஜயன் அபிமன்யுவின் பேரன். அபிமன்யு போர்க்களத்தில் இறக்கும் போது அவனது மனைவி உத்தரைக்கு 16 வயது. அவள் கருவுற்றிருந்தாள். சோகம் உயிர் அழுத்திய அவள் 6 மாதங்களிலேயே குழந்தைப  போல் ஒன்றை ஈன்றிறந்தால். குரு வம்சத்தின் எஞ்சி இருந்த  ஒரே வாரிசின் நிலை யுதிஷ்டிரனை கதி கலங்கச் செய்தது. த்ரௌபதி கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டாள்.

கிருஷ்ணன் அந்த குழந்தையை அன்னையிடமிருந்து பிரித்து ஒரு கடல்  சிப்பியில் நான்கு மாதங்கள் வைத்து உயிர்ப்பிக்கச் செய்தான். அவ்வாறு  த்வரகையில் பிறந்தவன் தான் ஜனமேஜயனின் தந்தை பரிக்ஷீத்.

பரிக்ஷீத் வேட்டையில் ஈடுபாடு உள்ளவனாக வளர்கிறான். ஒருமுறை வேட்டையின் போது ஒரு நாக சாபத்திற்கு உள்ளாகிறான். யுதிச்ற்றன் தன சகோதரர்களுடன் மகாவன்ப்ரச்தம் புக ஆட்சி பரிக்ஷீதிர்க்கு சேர்கிறது. தனது சாவு நாகத்தினால் என்று அறிந்து கொள்ளும் அவன் தன வம்சகுருவிடம் ஆலோசனை கேட்கிறான்.

இந்த உலகத்தில் காமம், குரோதம், முதலிய தீய குணங்களே நாகங்களாக உருவகம் கொள்கின்றன ஆகையால் நீ அவற்றை வென்று விட்டால் நீ தப்பிக்கலாம் என்று அறிவுறுத்துகிறார். வேறு வழி இல்லாமல் பரிக்ஷீத் அனைத்தையும் துறந்து ஒரு நீரரன் அமைத்து அதன் நடுவில் தவம் மேற்கொள்கிறான். அவனைத் தீண்ட ஒரு நாகம் சமயத்திற்காக காத்து நிற்கிறது. ஆறு நாட்கள் கழிகின்றன. ஏழாம் நாள் முடியும் முன் தான் காமத்தையும் அகங்காரத்தையும் முற்றிலும் வென்று விதியை தன மதியால் வென்று விட்டதாக எண்ணுகிறான். அந்த அகங்காரமே, அவன் உண்ட பழம் ஒன்றில் நாகம் சிறு புழுவாக தோன்றச்செய்து, தீண்டப்பட்டு இறக்கிறான்.

தந்தையை உண்ட அந்த நாக தோஷத்தில் இருந்து தன வம்சத்தை தப்புவிக்கவே ஜனமேஜயன் இந்த யாகத்தை நடத்துகிறான். வேள்வி செய்தவர்கள் அந்த வேள்வித் தீக்கு எல்லா சிறந்ததையும் தந்தனர். ஒரு கட்டத்தில் அனைத்து நாகங்களும் அந்த வேள்வியின் பயனாக அழிந்து விடுகின்றன. இந்த பூமியே ஒளி கூடியதாகிறது.

ஆனால் தட்சன், தட்சகி  என்ற பெரிய நாகங்கள் இன்னும் அழியவில்லை. அவர்கள் இந்திரனிடம் சரண் புகுந்திருப்பதை அறிந்து பெரும் சிரத்தை எடுத்து இந்திரனை வர்வித்து, அவர்களையும் வரவைக்கிறார்கள்.

தட்சகன் மாய்க்கப்படும் நேரம், ஆஸ்திகன் வேள்வியில் இருந்து எழுந்து தனக்கு இன்னும் வேள்விக்காநிக்கை தரப்படவில்லை என்று குறை கூறுகிறான். தனக்கு காணிக்கையாக தட்சனின் உயிரை கேட்கிறான்.

காரியம் கைகூடி வருகையில் இப்படி ஒரு தடை ஏற்ப்பட்டது கண்டு ஜனமேஜயன் பெரும் சினம் கொள்கிறான். வேறு வழி இன்றி காணிக்கை தருகிறான் ஆனால் ஆஸ்திகன் வெளியேறக் கூடாதென்று வழி மரிக்கிறான்.

சத் ரஜஸ் தமஸ் குணங்களின் சமநிலையிலேயே பூமி சரியாக இயங்க முடியும். இந்த சமநிலை பாதிக்கப்பட்டால் பூமி மட்கி அழியும் என்பதை எடுத்துக் கூறுகிறான். வேண்டுமானால் வியாச முனிவரை அழைத்து கேட்கும்மாறு கூறுகிறான்.

வியாசர் யமுனை நதிக்கரையில் பிறந்தவர். குருக்ஷேற்ற போர்பூமியில் இருந்தவர்களை உயிர்ப்பிக்கவேண்டும் என்ற பிரயத்தனத்தில் ஒரு காவியம் பாட எண்ணி தவம் மேற்கொள்கிறார். அவர் தவம் செய்யும் இடத்தில் ஒரு யானை வந்து தன தந்தத்தின் ஒரு பகுதியை விட்டு செல்கிறது.

அதையே வைத்து, அந்த யானையே கணபதியாக நினைத்து தன காவியத்தை எழுதி முடிக்கிறார் வியாசர். வேள்வி மேடைக்கு வரும் வியாசர், சிறுவன் ஆஸ்திகனை ஆசிர்வாதிக்கிறார். அவன் கூறுவது உண்மை என்றும் அதை அறிந்திட தனக்கு 200 வருடங்கள் தேவைப்பட்டது என்றும் கூறுகிறார்.

புரியாமல் நிற்கும் ஜன்மேஜயனுக்கு தனது காவியத்தை பாடி புரியவைக்குமாறு வைசம்பாயனரிடம் ஆணையிடுகிறார். ஆசிரியனின் அகங்காரத்தில் இருந்து தொடங்குமாறு கூறுகிறார்..