Sunday, December 1, 2013

ஜெயமோகன்

ஜெ மோ
என் நண்பர்களுக்கு ஜெயமோகனை அறிமுகம் செய்யும் விதமாக இந்த பதிவு.

நான் தற்போது பயணிக்கும், அயராது கண்டுகளிக்கும் இந்த இலக்கிய வெளிக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தவர் ஜெ. sometime in 2009 எதையோ தேடப்போய் google என்னை இவரது வலைதளத்துக்கு அழைத்து சென்றுவிட்டது. அன்றில் இருந்து இவர் வலைதளத்தை மேய்வதையே ஒரு பெரும் பணியாக செய்து வந்தேன். இவரைப்படிப்பதின் மூலம் பிற படைப்பாளிகளைப் பற்றியும் படைப்புகளைப் பற்றியும் அறிய ஒரு ஒப்பற்ற one -stop pit ஆக இருந்துள்ளது.
இவர் வலை என்னுள் ஏற்படுத்திய தூண்டலின் பேரிலேயே எனது வாசிப்பை பல கோணங்களிலும் விரித்து பரப்பிக்கொண்டேன். அந்த வகையில் ஜெ மீது எனக்கு என்றுமே ஒரு குருவின் மீது ஏற்ப்படும் வாஞ்சை உண்டு.

இந்த பதிவை 18 months முன் எழுதி இருந்தால் வாஞ்சை மட்டுமே இருந்திருக்கும், இப்பொழுது கொஞ்சம் விமர்சனமும் சேர்ந்துக்கொண்டுள்ளது.

இப்பொழுது ஜெ என்னும்போது ஒரு intellectual arrogance ஆல்  ஆன பிம்பமே மனதில் எழுகிறது. அவரது volume  of  writing  is amazing . பெரும் மலைப்பை ஏற்ப்படுத்தகூடியது. அவரது எழுத்துக்களை ஓரளவு மேய்ந்தவன் என்ற முறையிலும் அவரது எழுத்துப்பணியிலும், அவருக்கு இருக்கும் இலக்கிய ஆர்வலர் following ஐயும் பெரிதும் மதிப்பதினாலும், அவர் மீது கொண்டுள்ள ஒரு தார்மீக தோழ உணர்வினாலும் ,அன்பினாலும் எழும் விமர்சனமே இது.

 அவரது எழுத்தில் கனிவுக்கோ ஈரத்திர்க்கோ  இடம் இல்லை. கனிவும் ஈரமும் அவரது intellectual heat இல் காய்ந்து வரண்டு போய்விடுகின்றன. அவரது இந்த intellectual arrogance சே தான் அவரை இந்த 'பவர் ஸ்டாரை' உருவாக்கிய i t தலைமுறைக்கு உவப்பானதாக உள்ளது.

அவரால் 'அறம்' என்னும் சிந்தையை செதுக்கும் தொகுப்பை கொடுக்க முடியும் 'அன்பு' என்று உள்ளத்தை கனியச்செய்யும் எழுத்தை தர முடியாது. ஏற்கனவே வறண்டு போயிருக்கும் இந்த தலைமுறைக்கு இவரால் fertilisers தர முடியும், ஈரம் தர முடியாது.

ஜெ ஆல் முடியாதது இல்லை. தன்னை தானே செதுக்கிக்கொண்ட உன்னத எழுத்தாளன் அவர். எனது ஆசை, அவரது 'intellectual  arrogance' ஆலும்  அவரைச் சுற்றியுள்ள பக்த சிறோன்மநிகளாலும் மூடப்பட்டுள்ள  காதுகள், திறந்து இந்த விமர்சனம் அவர் நெஞ்சை எட்டி, சிறிதே கனியச்செய்ய வேண்டும், அது அவரது எழுத்துக்களிலும் வெளி வர வேண்டும் இந்த மண் பயனுற வேண்டும் என்பதே.

No comments: